மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை கட்டுப்படுத்த முழுமையான மதுவிலக்கே நிரந்தர தீர்வு என்றும், கள்ளுக்கு அனுமதி வழங்கி விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


கோவை:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் தனது கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தேர்தலில் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கும், ஆதரவு அளித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த தேர்தலில் கொமதேக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் நித்தியானந்தம் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்படுவார் என்றும், கொங்கு மண்டல வளர்ச்சிக்காக தங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், அவிநாசி சாலை மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது அரசியலில் இயல்பானது என்றும், தோல்விக்குப் பிறகு கட்சியை பிரிப்பதை விட ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் முதல் கட்டமாக சில டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது குறித்து பேசிய ஈஸ்வரன், அந்த நடவடிக்கையை வரவேற்றாலும், கடைகள் மூடப்பட்ட இடங்களில் சட்டவிரோத “சந்து கடைகள்” உருவாகும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

சில கடைகளை மூடுவதால் மட்டும் மது பழக்கத்தை குறைக்க முடியாது என்றும், டாஸ்மாக் வருமானம் குறையாமல் இருந்தால் விற்பனை குறையவில்லை என்பதற்கே அது சான்று என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...