கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கான நூலக வசதிகள், கோடைகால சிறப்பு வகுப்புகள் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார். 48,000 புத்தகங்களுடன் கூடிய நவீன வசதிகள் செயல்படுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கணபதிமாநகர் பகுதியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகத்தினை நேரில் ஆய்வு செய்தார். இன்று (19.05.2026) நடைபெற்ற இந்த ஆய்வின்போது, படைப்பகத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் TNPSC, UPSC, வங்கி மற்றும் இரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான நவீன நூலக வசதிகளுடன் கூடிய அமைதியான மற்றும் அறிவார்ந்த கற்றல் சூழலை வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.



மேற்கு மண்டலம் வார்டு எண் 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிரபு நகர் மற்றும் வடக்கு மண்டலம் வார்டு எண் 20க்குட்பட்ட கணபதிமாநகர் ஆகிய 2 இடங்களில் தலா ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு முதல்வர் படைப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.



இம்மையங்களில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் சுமார் 48,000க்கும் மேற்பட்ட பல்வேறு புத்தகங்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிருட்டப்பட்ட ஆலோசனைக்கூடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்புடன் கூடிய CO-Working Space அமைக்கப்பட்டுள்ளன. புதிய தொழில் முனைவோர்களுக்கான சேவைகள், தகவல் தொழில்நுட்ப மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் மற்றும் வேலை தேடுபவர்கள், தொழில் முனைவோருக்கான பரந்த அளவிலான பல்வேறு சேவைகளுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.



இன்றைய தினம் வடக்கு மண்டலம் வார்டு எண் 20க்குட்பட்ட கணபதிமாநகர் 4வது பிளாக் பகுதியில் செயல்பட்டுவரும் முதல்வர் படைப்பகத்தினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் மற்றும் சிறுவர்களுக்கு கோடைகால சிறப்பு விளையாட்டுகளான செஸ், அபாகஸ் மற்றும் டிஜிட்டல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.



மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடிய ஆணையாளர், பயிற்சி வகுப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமெனவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண் 28க்குட்பட்ட FCI சாலை முதல் சிங்காநல்லூர் குளம் வரை செல்லும் கிளை வாய்க்கால் பகுதியில் மழைக்காலங்களில் தங்கு தடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 1.37 கி.மீட்டர் நீளத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர்கள் இளங்கோவன், L.S.மகேஷ், நூலக பொறுப்பாளர் சரண்யா, ஒருங்கிணைப்பாளர் அக்ஷயா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...