கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. இதில் கார், வீடு மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த சில நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பரவலாக காற்றுடன் மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மடை, தடாகம், இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.



சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும் பதிவாகின.



குறிப்பாக, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டு பகுதி மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. மரம் விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், மரத்தை அகற்றும் பணியிலும் மின் இணைப்பை சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...