கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் (மார்க்சிஸ்ட்) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : கோவை தடாகம் சாலை கோவில்மேடு பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடைகள் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபோதையில் வரும் சிலர் சாலையில் தகராறு செய்வதும், ரோட்டில் விழுந்து கிடப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதனால் மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்பகுதியில் பல்வேறு கோவில்களும் உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மூடவுள்ளதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இந்த இரண்டு கடைகளையும் சேர்த்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...