குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: கோவை: குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “எங்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து பல்வேறு தொழில் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தோம். குறிப்பாக குறு, சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம்” என்றார்.

மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SGST வணிகவரி துறை, 2007 முதல் 2022 வரை முடிக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் கோரி, ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு அபராதம் விதித்து வருவதாகவும், பழைய கணக்குகளை சமர்ப்பிக்க கடுமையான நெருக்கடி அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

“பல ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குகளை கேட்டு தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்குப் பதிலாக, நடப்பு கணக்குகளை மட்டும் சரிபார்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்,” என ஜேம்ஸ் தெரிவித்தார்.

தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்ததாக, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சவுந்தரகுமார், ரவீந்திரன், சுரேந்திரன், சுரேஷ், பாண்டியன், சங்கரநாராயணன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...