மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 39வது முறையாக போலி மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபரை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை:

கோவையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தொடர்ந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.



முன்னதாக கோவை பாஸ்போர்ட் அலுவலகம், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அடிக்கடி மிரட்டல் இ-மெயில்கள் வந்து வருகின்றன.

நேற்று முன்தினம் மிரட்டல் வந்திருந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் மீண்டும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது.



இதையடுத்து அதிர்ச்சியடைந்த அலுவலக பணியாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில், இந்த மிரட்டலும் வழக்கம்போல வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பி வரும் மர்ம நபரை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்பும் நபர் அடிக்கடி இ-மெயில் முகவரிகளை மாற்றி, வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவரை நவீன தொழில்நுட்ப உதவியுடன் அடையாளம் காண போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...