டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து போராட்டம்.

பொள்ளாச்சி அருகே சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சொந்த ஊரான திப்பம்பட்டி பூங்கா நகரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, மது பாட்டில்களை வீசி உடைத்து போராட்டம்.

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி பூங்கா நகரில் உள்ள விவசாயத்தோட்டத்தில் நெடுஞ்சாலையிலிருந்து அகற்றப்பட்ட மதுபான கடை  புதிதாக திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தகவலறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி நேற்று  அதே இடத்தில் மதுபான கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இன்று கடையை முற்றுகையிட்டனர். அப்போது திடீரென ஆவேசமாக பூட்டைஉடைத்து கடையில் இருந்த மதுபாட்டில்களை  கடைமுன்பு  உடைத்து நொருக்கியதால் பெரும்பரபரப்பு ஏற்ப்பட்டது.

பின்னர் அங்கு வந்த காவல்துறை மற்றும் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடையை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மதுபானக்கடைக்கு எதிராக துணை சபாநாயகர் ஊரிலேயே பொதுமக்கள் கடையை உடைத்திருப்பது ஆளும் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...