செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, செங்குளத்தில் இருந்த சுமார் 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தன்னார்வலர்கள் துணையுடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து, குளத்தில் உள்ள புதர்கள் கட்டிட கழிவுகள் ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.



மேலும், 12.5 கிமீ தூரமுள்ள குனியமுத்துர் தடுப்பணை வாய்க்கால் தூர்வாரும் பணியானது நமது கோவை நமது பசுமை அமைப்பின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. இப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 150 தன்னார்வலர்கள், கேமரூன் மனுஃபேட்சரிங் இந்தியா பிவிடி லிமிட்டடு உதவியுடன் வெள்ளலூர் குளத்தில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இதுவரை 65 சதவிகிதம் பணி நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து, மலுமிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் மழை நீர் குட்டை தூர்வாரும் பணியினையும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் துவங்கி உள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...