கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு 21-ம் எண் அரசு பேருந்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, 21-ம் எண் அரசு நகரப் பேருந்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, கோவை மாவட்டஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொண்டாமுத்தூர் அருகேயுள்ள கெம்பனூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணாநகரில் நூற்றுக்கணக்கான பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது அன்றாடப் பணிகள், மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி பயணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக 21-ம் எண் அரசு நகரப் பேருந்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.



இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அண்ணாநகர் பகுதிக்குள் பேருந்து முறையாக இயக்கப்படவில்லை என்றும், பட்டியலின மக்களை ஏற்றுவதில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் புகார்கள் வெளியாகின. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றதுடன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அமைச்சர் வன்னி அரசு, "மக்களாட்சியில் சாதியின் பெயரால் பொதுமக்கள் புறக்கணிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது" எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பன்னருக்கு அனுப்பிய உத்தரவில், "அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 21-ம் எண் அரசு நகரப் பேருந்தை எவ்வித தங்குதடையுமின்றி உடனடியாக இயக்க வேண்டும். பேருந்து சேவையில் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.



மேலும், இனிவரும் காலங்களில் இப்பகுதியில் சாதிய தீண்டாமை தொடர்பான எந்தவித புகார்களும் எழாத வகையில் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வன்னி அரசு உத்தரவிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...