கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியிட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடத்தி வருகின்றனர்.


கோவை : கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் நிலை நிலவி வருகிறது.

அதிக பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியிட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



மேலும், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வழங்கி வரும் Crystal நிறுவனத்தில் பணியாற்றிய 10 ஊழியர்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.




இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்களை ESI மருத்துவமனைக்கு மாற்றவும், அதே நேரத்தில் ESI மருத்துவமனையில் பணியாற்றி வரும் 10 பேரை அரசு மருத்துவமனைக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியர்களை அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடத்திலேயே அமர்த்த வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் இருந்து ESI மருத்துவமனைக்கு அல்லது ESI மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




இந்த பிரச்சினை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மருத்துவமனையின் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...