நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 6 பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பேசி பறித்த 3 பேரை தடாகம் காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் கைது செய்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் வீடும் நிலமும் வாங்குவதாக கூறி,ஏமாற்றி 6 பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறை தனிப்படை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.




கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சிவகுமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை பேபி என்ற மாயா (21) என்பவர் வீடு வாங்க வேண்டும் என்று அணுகியுள்ளார்.பின்னர், சிவக்குமார்இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஒரு வீட்டை காட்டியுள்ளார்.




அதன் பிறகு, பன்னிமடையில் தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறி, பொன்னூத்து அம்மன் கோவில் வழியாக சிவகுமாரை, பேபி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனது நண்பர்களான மோகனகிருஷ்ணன் (27) மற்றும் கண்ணதாசன் (28) ஆகியோரை சம்பவ இடத்திற்கு வருமாறு பேபி அழைத்திருந்தார்.




இந்த நிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி மாலை மூவரும் சேர்ந்து சிவகுமாரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பேசியை பலவந்தமாக பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.




இந்த சம்பவம் குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடத்தி, வழக்கில் தொடர்புடைய பேபி @ மாயா, மோகனகிருஷ்ணன் மற்றும் கண்ணதாசன் ஆகிய மூவரையும் வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.






மேலும், குற்றவாளிகளிடமிருந்து பறிக்கப்பட்ட 6 பவுன் தங்கச் செயின், கைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...