இந்து மதத்தையும், பெண்கள் சமூகத்தையும் இழிவாக பேசும் கிருத்துவ போதகர் மீது நடவடிக்கை கோரி அகோரிகள் போராட்டம்

கோவையில் இந்து மதத்தையும், இந்து மத பெண்களையும், காசி அகோரிகளையும் இழிவுப்படுத்தி கிருத்துவ போதகர் பேசுவதாகவும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தை தடை செய்யக்கோரியும், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உடுக்கை அடித்தும், சங்கு ஊதியும் அகோரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிறித்துவ மத போதகர் ஆண்டர்சன். இவர், வெளியிட்டு வரும் யெகோவா-யீரே-ன் குமுறலின் சத்தம் என்ற ஜெப குறிப்பு புத்தகங்களில் தொடர்ந்து இந்து மத பெண்களை இழிவுப்படுத்தி வந்ததாகவும், காசி அகோரிகளை பிணம் திண்பவர்கள் என இழிவுப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் குமுறலின் சத்தம் புத்தகத்தை தடை செய்யவும், எழுதிய ஆண்டர்சனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யக்கோரியும், காசி அகோரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.



அப்போது சங்கு ஊதியும், உடுக்கை அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அகோரிகள், இந்து மத பெண்களையும், அகோரிகளை பிணம் திண்ணும் பேய்கள் என இழிவுபடுத்திய புத்தகத்தை தடை செய்ய வேண்டுமெனவும், அப்புத்தகத்தை வெளியிட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வடுகொடுமை தடுப்பு சட்டத்திலும் கைது செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலும், நடவடிக்கை எடுக்கத்தவறினால் காசியில் இருந்து நிர்வாண அகோரிகளை வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...