ஸ்ட்ரைக் எதிரொலி- ரயில் நிலையத்திலும், தனியார் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து பல்வேறு மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறைத்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிலையங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் அங்கு மக்கள் நெரிசல் அதிகமாகியுள்ளது.



அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்காததால், தனியார் டூரிஸ்ட் பஸ்கள் கோவையில் இருந்து இயக்கப்படுகின்றன.



இதனால், தனியார் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகன ஒட்டிகளை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான கோவை நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...