கணியூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து- இருவர் உயிரிழப்பு


கோவையை அடுத்த கணியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது, வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

சேலம் - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த கார் கோவையை அடுத்த கணியூர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, திடீரென டயர் வெடித்து பழுதாகி சாலையில் நின்றது. இதனை பார்த்த இரு சக்கர வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்க உதவிக்கொண்டிருந்தனர். 

இதனிடையே, திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி மற்றொரு கார் வேகமாக வந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, பழுதாகி நின்றுகொண்டிருந்த காரிரை பார்த்த கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பழுதாகி நின்றுகொண்டிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு கார்களில் இருந்தவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். அதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்தும், பலியானவர்கள் விபரங்கள் உள்ளிட்டவை குறித்தும் கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...