கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி தூய்மை பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்து அறிவுறுத்தல் வழங்கினார். தரமான பணிகள் உறுதி செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 27ல் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.




பீளமேடு சூர்யா கார்டன் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், தரமான முறையில் சாலை அமைக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது வார்டு உதவி பொறியாளர் குமார் உடனிருந்தார்.






அதேபோல், வார்டு எண் 27ல் உள்ள பீளமேடு துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் மாஸ் கிளீனிங் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலையோர செடிகள், குப்பைகள் மற்றும் சாக்கடைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் பகுதியை தூய்மையாக பராமரிக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு பாரதி காலனி பகுதியில் செயல்படும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேடுகளை விரிவாக ஆய்வு செய்தார். ஆய்வின்போது மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருந்து தேவையான விளக்கங்களை வழங்கினர்.






மேலும், பீளமேடு ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி முன்பகுதியில் மரக்குப்பைகள் அகற்றப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. பணிகளை நேரில் பார்வையிட்ட கவுன்சிலர் அம்பிகா தனபால், பள்ளி அமைந்துள்ள பகுதி என்பதால் குப்பைகள் மற்றும் மரக்குப்பைகளை தினசரி அகற்றுமாறு வார்டு சூப்பர்வைசருக்கு உறுதியான அறிவுறுத்தல் வழங்கினார்.






இவ்வாறு வார்டு 27ல் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு மற்றும் தூய்மை பணிகள் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...