முதல் தலைமுறை தொழில் முனைவோர் புதிய தொழில்கள் துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி- கோவை ஆட்சியர்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நீட்ஸ் திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் 2017-18ம் நிதியாண்டில் தொழில் துவங்க முன்வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தொழில் திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத்தரப்படும். இத்திட்டத்தினை மாவட்ட தொழில் மையமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்படுத்துகின்றன.

இத்திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவைத்தொழில்களை துவங்கலாம். இதற்கென தமிழக அரசு 25 சதவீதம் மானியமும், 3 சதவீதம் பின்முறை வட்டி மானியமும் வழங்குகிறது.

புதியதாக துவங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். அரசு திட்டங்களின்கீழ் ஏற்கனவே, மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று திருப்பி செலுத்தாதவராக இருத்தல் கூடாது.

இத்திட்டத்தின் அரசாணை, விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட தொழில் மையத்தின் www.dickovai.com என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்ட பயனாளிகள், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத மேலாண் பயிற்சி ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் 2016-17 கடந்த நிதியாண்டில் 83 நபர்களுக்கு ரூ.14 கோடியே 38 லட்சத்து மானியத்துடன் கூடிய ரூ.45 கோடியே 61 லட்சத்து கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. தென்னை நார் கழிவுக் கட்டிகள், மசாலா பவுடர், காலணி, உணவு எண்ணெய், அட்டை பெட்டிகள், ஆயுத்த ஆடை, சாக்லேட், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், சி.என்.சி, லேத், ஷீட் மெட்டல் பேப்ரிகேசன், பிளாஸ்டிக் இன்ஜக்ஷன் மோல்டிங், பெட் பாட்டில், பெயிண்ட், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பி.வி.சி. பைப், பிவிசி கதவு மற்றும் ஜன்னல்கள், செல்லோ டேப், தோல் பொருட்கள் போன்ற உற்பத்தி தொழில்கள் மற்றும் அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், இயன்முறை மருத்துவம், கேட்டரிங் சர்வீஸ், நான் டெஸ்ட்ராக்டிவ் டெஸ்டிங் உள்ளிட்ட சேவைத் தொழில்களும் இத்திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டு 2017-18ம் கோவை மாவட்டத்திற்கு ரூ.480 லட்சம் மானியத் தொகை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, தகுதியும், ஆர்வமும் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து  பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...