மகளிர் வழக்குகளை கையாளுவது மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் மகளிர் வழக்குகளை கையாளுவது மற்றும் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் செயலாளர் ரேகாசர்மா தலைமையில் பெண்களுக்கு எதிரான வழக்குகளை இந்தியா முழுவதும் காவல்துறை எப்படி கையாள்கிறது எனவும், வழக்குகள் உடனே பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இந்த கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான வழக்குகள், வரதட்சணை பிரச்சனைகள், பெண்கள் பணியிடங்களில் தாக்கப்படுதல், பொது இடங்களில் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகார்களுக்கு காவல்துறை உடனே வழக்கினை பதிவு செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதலுதவி மற்றும் சட்ட ரீதியான உதவிகளை செய்வது குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற சூழ்நிலை  உருவாகியுள்ள நிலையில் நிர்பயா வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை பெண்கள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் நடத்தும் இந்த கூட்டத்தின் மூலமாக காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கும் 40 வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...