முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் வசதி இணைதளத்தில் அறிமுகம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் வசதி தற்பொழுது இணைதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தாங்களாகவே ஆதார் எண்ணை காப்பீட்டுத் திட்ட அட்டையில் இணைத்துக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரி அல்லது பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து காப்பீட்டுத்திட்டம் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணையதள முகவரி:

CMCHISONLINE.CMCHISTN.COM (அல்லது) Play Store- ல் CMCHIS online

மேலும், கிராமம் தோறும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் நேரில் வந்து ஆதார் எண் இணைப்பு வசதியை செய்துக்கொடுத்து வருகின்றனர். இச்சேவையையும் பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...