கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார். விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Coimbatore: இந்திய அரசு 2027ஆம் ஆண்டு குடியரசுதின விழாவில் வழங்கவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு இந்திய அரசாங்கம் பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்குகிறது.

இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படுகின்றன. மேன்மை பொருந்திய பணிகளை செய்து சாதனை படைத்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களை https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பெற்று, ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு தொடர்பான விண்ணப்பங்கள் மட்டும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெறப்படும்.

விளையாட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதன் மூன்று நகல்களுடன் ஜூலை 31, 2026க்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கோவை மாவட்டம் அவர்களிடம் நேரில் வந்து சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரைகளுடன் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...