கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் தொடங்கி வைத்தார். மாணவர்களின் 65 மாதிரிகள், பழங்கால அரிய பொருள்கள், நாணயங்கள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தன.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் இந்திய அறிவுசார் மையத்தின் சார்பில், இந்திய அறிவு மரபின் அருமை மற்றும் ஆழத்தை விளக்கும் வகையில் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மாணவர்களின் 65 மாதிரிகள், பழங்கால அரிய பொருள்கள், நாணயங்கள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.






கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் கண்காட்சியைத் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். இந்திய அறிவு மரபானது உடல், உள்ளம், உயிர் ஆகிய மூன்றையும் மேம்படுத்தும் தனித்தன்மை கொண்டது என்று அவர் விளக்கினார். இளைஞர்கள் இந்திய அறிவு மரபின் சிறப்பை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டிய கடமை உள்ளவர்கள் என்றும், அதை தங்கள் வாழ்வியலாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.




துணைவேந்தர் முனைவர் சு.இரவி தமது வாழ்த்துரையில், யோகம் முதலான இந்தியக் கலைகள் உடலையும் உள்ளத்தையும் பண்படுத்தும் உயர்வு கொண்டவை என்று சுட்டிக்காட்டினார். கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் வீ.ராகவி வரவேற்புரை வழங்கினார். நிகழ்த்துக் கலைப்புலத்தின் முதன்மையர் முனைவர் வெ.ஜனகமாயாதேவி நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.




கண்காட்சியில் ஆசிரியர் திருச்சி இளம்வழுதி மாவட்ட ஆணையாளர் (கப் பிரிவு) தலைமையிலான குழுவினர் பழங்கால அரிய பொருள்கள், நாணயங்கள் மற்றும் அகழாய்வுக் குறிப்புகளை காட்சிப்படுத்தியது நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தது. இந்திய அறிவு மரபை விளக்கும் வகையில் மாணவர்களின் 65 மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றன.




நிகழ்விற்கு பாரம்பரிய ஒயிலாட்டம், தேவராட்டம், வள்ளிக் கும்மி முதலான நடனங்கள் பொலிவு சேர்த்தன. கணிதத்துறைத் தலைவர் முனைவர் ம.மா.சண்முகப்பிரியா நன்றியுரை வழங்கினார். ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் ச.செல்வலட்சுமி இந்திய அறிவுசார் மையத்துடன் இணைந்து நிகழ்வை ஒருங்கிணைத்தார்.


Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...