கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி மூன்று அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 54.7 அடியாக நீர்மட்டம் உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 195 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 29 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1733 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வால்பாறையை அடுத்த சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 92.24 அடியாக நீர்மட்டம் உள்ளது. இந்த அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 3507 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1153 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால், மாவட்ட அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...