கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர் எரிசாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை: கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரள மாநில ஆயத்தீர்வைத் துறையினர் இணைந்து மேற்கொண்ட மாநிலங்களுக்கு இடையேயான அதிரடி சோதனையில், சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் (Spirit) நிரப்பப்பட்ட 200 கேன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

எரிசாராயக் கடத்தல் தொடர்பாக கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் காமராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கேரள மாநிலம் கண்ணூர் ஆயத்தீர்வைத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவை மத்திய நுண்ணறிவு பிரிவினரும் கண்ணூர் ஆயத்தீர்வைத் துறையினரும் இணைந்து நள்ளிரவில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் நிரப்பப்பட்ட 200 கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



இந்த நடவடிக்கையில் ஒருவரை கைது செய்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் லாரியை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கேரள மாநில எக்சைஸ் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மாநிலங்களுக்கு இடையேயான எரிசாராயக் கடத்தலை தடுத்து நிறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த கடத்தல் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையில், கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் சேகர், தலைமைக்காவலர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...