நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட கழிவுகளா என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கோவை அவிநாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டின் மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுக் கிடந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்ட கழிவுகளா என்ற புதிய கோணத்தில் சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.



கோவையின் எல்லைப் பகுதிகளான வாளையார், ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வழியே கேரள மாநிலத்தில் இருந்து பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் நள்ளிரவு நேரத்தில் லாரிகளில் கடத்தி வரப்பட்டு, தமிழக எல்லை மற்றும் கோவை புறநகர்ப் பகுதிகளில் உள்ள புதர்களில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.




தற்போது நீலாம்பூர் பகுதியிலும் நூற்றுக்கணக்கான மாட்டின் மண்டை ஓடுகள் லாரி கணக்கில் கொட்டப்பட்டு இருப்பதால், இதுவும் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு நள்ளிரவில் வீசிச் செல்லப்பட்ட கழிவுகளாக இருக்கலாம் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பலமான சந்தேகத்தை எழுப்புகின்றனர்.


சின்னியம்பாளையம்-நீலாம்பூர் சாலையோரப் புதரில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற நபர் ஒருவர், துர்நாற்றம் வீசியதைக் கண்டு பார்த்தபோது குவியல் குவியலாக மாட்டின் மண்டை ஓடுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அதைச் செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட, அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.


இக்கழிவுகளால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாகித் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகமும் காவல் துறையும் உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எல்லைச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, கேரளாவில் இருந்தோ அல்லது உள்ளூர் கசாப்புக் கடைகளில் இருந்தோ கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிய மர்ம நபர்கள் மீது கடினமான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...