மாநகராட்சி பணிகள் குறித்து மேற்கு மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 16-வது வார்டுக்குட்பட்ட மருதமலை ரோடு, வடவள்ளி பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, வடவள்ளி பகுதிகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், பின் லிங்கனூர் மயானத்தில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், வடவள்ளி பகுதிகளில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியம் மற்றும் மூடு பலகை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.



இதையடுத்து, வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்பு முனையம் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...