கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S. சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். சுமார் 900 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இணைய பாதுகாப்பு குறித்து விவரிக்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் Cyber Crime Awareness Programme எனும் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 27, 2026 அன்று காலை 10.00 மணியளவில் திருமந்திரம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr S. ரவி மற்றும் பதிவாளர் B. V. பிரதீப் தலைமை தாங்கினர்.






இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக S. சௌந்தரராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP), தலைமையகம், கோவை மாவட்டம் கலந்துகொண்டு இணையக் குற்றங்கள், இணைய பாதுகாப்பு மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இணையவழி குற்றங்களின் தன்மை, அவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.




கவிதா, Inspector of Police, Cyber Crime, Coimbatore District மாணவர்களுக்கு இணையவழி மோசடிகள், தகவல் திருட்டு, சமூக வலைதள குற்றங்கள் உள்ளிட்ট பல்வேறு இணையக் குற்றங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை விரிவாக விவரித்தார். தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.






இந்நிகழ்ச்சியில் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி K. M. G. ஆதி பாண்டியன், கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் சுமார் 900 மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...