குடியிருப்பு வாசிகள் குப்பைகளில் இருந்து பையோகேஸ் தயாரிக்க கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்- மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில்  100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து சேகரம் செய்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 4,041 நகரங்களின் 100 சதவிகிதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய தேவையான விரிவான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை குடியிருப்பு வாசிகள் தரம் பிரித்து தங்கள் சொந்த பொறுப்பில் அவர்களுடைய வளாகத்திலேயே மக்கும் குப்பைகளை பையோகேஸ் அல்லது உரம் தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், மறுசுழற்ச்சிக்கு ஏதுவான பிற கழிவுகளை தனி நபருக்கு விற்பனை செய்யவோ அல்லது மாநகராட்சியிலும் ஒப்படைக்கலாம்.

மேலும், இதர குடியிருப்புகளில் மாநகராட்சி மூலம் 2,087 குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டிகள் மூலம் தரம் பிரித்த குப்பைகளை சேகரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...