கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர் ஒருவர் கைப்பையில் மதுபாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மண்டல தீயணைப்புத் துறை தலைமை அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருந்து செல்கின்றனர்.

மேலும், கோவை மத்திய ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இதன் காரணமாக, இப்பகுதியைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணி போல் அமர்ந்திருந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த கைப்பையில் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படும் காட்சி வெளியாகியுள்ளது.

இதனை அங்கிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பேருந்து நிறுத்தத்திலேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...