பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 99% பேருந்துகள் Fair Copy அடிப்படையில் இயங்குவதாகவும், அமைச்சரின் செயல் மெத்தனமாக உள்ளதாகவும் தலைவர் ஜெயம் பாண்டியன் தெரிவித்தார்.


Coimbatore: ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அனைத்து ஆம்னி பேருந்து மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் கடும் குற்றம் சாட்டியுள்ளனர். காந்திபுரம் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் ஜெயம் பாண்டியன் இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்தார்.






ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை, டிக்கெட் விலை உயர்வு என செய்திகள் பரவி வரும் நிலையில், சங்கத்தின் 99% பேருந்துகள் 2024 ல் கொடுக்கப்பட்ட Fair Copy அடிப்படையில் தான் இயங்கி வருவதாக ஜெயம் பாண்டியன் தெரிவித்தார். ஒரு சில பேருந்துகள் அதிக விலையில் இயக்கப்பட்டாலும், அவை தங்கள் சங்கத்தினரின் பேருந்துகள் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.




அதிக கட்டணம் வசூலிக்காத வாகனங்களுக்கு கூட அரசாங்கம் அபராதம் விதிப்பதாக விமர்சித்த அவர், இதற்கு போக்குவரத்து துறை அமைச்சரின் செயல்பாடுகள் தான் காரணம் என்று கடுமையாக சாடினார். அமைச்சர் முறையாக விசாரித்திருக்கலாம் என்றும், அவரது நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்றும் தெரிவித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் இதுவரை தங்களை சந்திக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.




கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆஃபர் என்ற பெயரில் குறைந்த விலையில் சேவை அளித்துவிட்டு, ஆஃபர் முடிந்ததும் இயல்பான கட்டணம் அதிகமாக தெரிவதாக அவர் சுட்டிக்காட்டினார். அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்தால் அதன்படி வாகனங்களை இயக்க தயாராக உள்ளதாகவும், அதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இது பற்றி பேசினால் தன்னை துணை நடிகர் என்று அழைப்பதாகவும் புகார் தெரிவித்தார்.




தற்போது பர்மிட் பதிவு ஆன்லைனில் இலவசமாக இருந்தாலும், அதனை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் லஞ்சம் கேட்க நினைக்கிறார்களோ என எண்ணம் தோன்றுவதாக அவர் கூறினார். அமைச்சர் பொறுப்பற்ற அமைச்சராக தெரிவதாகவும், ஆக்டிவாக இல்லை என்றும் விமர்சித்தார்.




இவ்வளவு பிரச்சனைகள் நடப்பதற்கு அமைச்சரின் செயல்பாடு தான் காரணம் என்று கூறிய அவர், பர்மிட் கொடுத்திருந்தால் புதிய வாகனங்கள் இயக்கப்பட்டிருக்கும் என்றார். அமைச்சரின் செயல்பாடு மெத்தனமாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.




இது 50 வருட பிரச்சனை என்றும், உடனே சரிசெய்ய முடியாவிட்டாலும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அவர், இ-காமர்ஸ் மூலம் இயங்கும் சேவைகளில் உரிமையாளர் யார் என்றே தெரியாத நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...