பொறியியல் மாணவர்களை ஊக்குவிக்கும் சிம்ப்ளிசிட்டி மற்றும் எஜுதர்மா


12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் பெற்று பொறியியல் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது சிம்ப்ளிசிட்டி மற்றும் எஜுதர்மா இணைந்து செயலாற்றி வருகின்றன. 

இதில், 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் பெற்றுள்ள மாணவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி கல்லூரி தேர்வின் போது தரவரிசையில் 7.0 பெற்றவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் சேர ஊக்கப்படுத்துவது உள்ளிட்டவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்ப்ளிசிட்டி செயலி, தற்போதைய நிலவரம், உள்ளூர் செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, அரசு அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றை மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிந்து பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது.

எஜுதர்மா (www.edudharma.org) என்பது ஒரு இணையதளப்பக்கமாக செயல்பட்டு வருவதாகும். எஜுதர்மா, தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வியினை தொடர, விளையாட்டு மற்றும் பிற புதுமையான திட்டங்களைத் தொடர ஒரு அடித்தளமாக இருந்து செயல்பட்டு வருகிறது. இவை ஒரு குழுவாக செயல்பட்டு மாணவர்களுக்கான நிதியைத் திரட்டி அதன் மூலம் அவர்களுக்கு உதவிவருகிறது.

இதுகுறித்து மேலும் தகவலறிய, மற்றும் இதன் மூலம் பயனடைய 0422-4500445 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது [email protected] என்னும் இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...