பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது -மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேச்சு.


பாஜக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்துவிட பாஜக முயல்கிறது எனவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுக்க கூட தமிழக அரசிற்கு தைரியமில்லை எனவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன் குனிந்து நடந்த அதிமுக அமைச்சர்கள், தற்போது டெல்லிக்கு முன் குனிந்து நடக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை எனவும், இந்தி திணிப்பை தான் எதிர்ப்பதாகவும் சுட்டிகாட்டிய அவர், மைல்கல், மத்திய அரசு அலுவலகங்கள், டிவிட்டர் என அனைத்து இடங்களிலும் இந்தியை நுழைப்பதில் மட்டுமே மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்தி தேசிய மொழி இல்லை எனவும், 22 ஆட்சி மொழிகளில் ஒன்று தான் இந்தி எனவும் கூறிய அவர், இந்தி திணிக்கப்பட்டால் மற்றுமொரு மெரினா போராட்டத்திற்கு மாணவர்கள் தயாராகி கொள்ளுங்கள் என தெரிவித்தார். இந்தி கற்றுக்கொள்ளவில்லை எனில் நான் தேசத்துரோகி என்றால், தேச துரோகியாக இருக்கவே பெருமைபடுகிறேன் என கனிமொழி தெரிவித்தார்.

தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் காலுன்ற முடியாது எனவும், இந்தியை திணித்து தமிழர்களின் மொழியையும், அடையாளத்தையும் அழித்து விட பாஜக முயல்கிறது எனவும் குற்றம்சாட்டிய அவர்,  இந்தி திணிக்கப்பட்டால் மாணவர்கள் ஒன்றுபட்டு நின்று எதிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...