காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதியில் ஈக்களின் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். உணவுப் பொருட்கள், பாத்திரங்கள் மீது ஈக்கள் அமர்வதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், சுப நிகழ்ச்சிகளையும் அன்றாட வாழ்க்கையையும் மனநிம்மதியாக மேற்கொள்ள முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மருந்து தெளித்தல், சுகாதார ஆய்வு, கழிவு அகற்றுதல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா, கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்களின் தொல்லையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

கோவில்பாளையம்–நெகமம் சாலையில் அமைந்துள்ள காணியாளம்பாளையம் பிரிவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாக அரசின் அனுமதி பெற்ற DTCP அப்ரூவல் பெற்ற வீட்டுமனை பகுதியான MIRA HOMES பகுதியில் புதியதாக கட்டப்பட்டு குடியமர்ந்துள்ள வீடுகளில் ஈக்களின் தொல்லை மிகவும் அதிகரித்துள்ளதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த ஈக்கள் வீடுகளுக்குள் அதிக அளவில் நுழைந்து, உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் குடிநீர் பாத்திரங்களின் மீது அமர்வதால் அவற்றை சுகாதாரமான முறையில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்திற்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், நிம்மதியாக பசிக்கு உணவு உட்கொள்ள முடியாதவாறு சாப்பாட்டு தட்டில் கூட ஈக்கள் அமர்ந்து அருவருக்கத்தக்க நிலை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



ஈக்களின் கடுமையான தொல்லையால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையையே மனநிம்மதியாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுவதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தையும் மனஉளைச்சலையும் சந்தித்து வருகின்றனர்.

எனவே, இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு, நேரடி ஆய்வு மேற்கொண்டு, ஈக்களின் பெருக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்து, மருந்து தெளித்தல், சுகாதார ஆய்வு, கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட தேவையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...