பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து காந்திபுரம் பெரியார் படிப்பகம் வரை முற்போக்கு இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பெரியாரின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு அவரது கொள்கைகளை முழக்கமிட்டு பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அமைப்பினர்களும் மரியாதை செலுத்தி வந்தனர்.


Coimbatore: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் சிலைகளுக்கும் புகைப்படங்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள், சங்கங்களை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பெரியார் கொள்கைகள் பற்றி மேற்கோள்காட்டி வாழ்த்துக்களையும் மரியாதைகளையும் தெரிவித்து வருகின்றனர்.



கோவையிலும் பல்வேறு இடங்களில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி கோவையில் நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து காந்திபுரம் பெரியார் படிப்பகம் வரை கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.



முற்போக்கு இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் பல்வேறு பெரியாரிய அமைப்புகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரியாரின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு பெரியாரின் கொள்கைகளை முழக்கமிட்டபடி பேரணி மேற்கொண்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...