நகை பட்டறை ஊழியரை கத்தியால் குத்தி ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளை: கோவையில் துணிகரம்


கோவை கெம்பட்டி காலணி பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் வீதியில் தங்க நகைபட்டறை நடத்தி வருபவர் குணசேகரன். இந்த நகை பட்டறையில் நாகராஜ் மற்றும் சரவணன் ஆகிய இருவர் நேற்று இரவு பணியில் இருந்தனர். இன்று அதிகாலை சரவணக்குமார் கடைக்கு சென்ற நேரத்தில் நகை பட்டறைக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய்பொடி தூவினர். மேலும், அவரை மூன்று இடங்களில் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த நாகராஜ் அலறித்துடித்தார். அப்போது, நகை பட்டறையில் இருந்த 1.5 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

கடைக்கு சென்றுவிட்டு நகை பட்டறைக்கு திரும்பிய சரவணகுமார் இரத்த வெள்ளத்தில் இருந்த நாகராஜை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், நகை கொள்ளை போன சம்பவத்தை அறிந்து, பெரிய கடை வீதி போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...