ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.9.75 கோடி மதிப்புள்ள இடம் கோவை மாநகராட்சியால் மீட்பு


கோவை மாநகராட்சியில் ஒரு மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.75 கோடி மதிப்பிலான 1.14 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இழகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கடந்த சனிக்கிழமையன்று (மே 20) மாநகராட்சியிலுள்ள ஒரு மண்டலங்களான மேற்கு மண்டலம், ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.75 கோடி மதிப்பிலான 1.14 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வடவள்ளி, வார்டு-16, கே.கே.ஆர் நகரில், பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான 6.34 சென்ட் அளவிலான இடங்களும், இணைப்பு ரோடுக்குட்பட்ட பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 40 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் நியூ கார்டன் நகர் பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 68 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.75 கோடி மதிப்பிலான 1.14 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...