ஆழியாறு அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் பணி துவக்கம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு அணையில் இன்று பொதுப்பணித்துறையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல்மண் வழங்குதல் மற்றும் தூர்வாறும் பணி துவக்கவிழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் ஆழியாறு அணை தூர்வாறும் பணியினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு வண்டல்மண் வழங்கும் பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில்.



தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி, குளங்கள் தூர்வாறும் பணி நடைபெற்று வருவதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பெரிய ஆறுகளாக திகழ்ந்து வரும் ஆழியாறு, அமராவதி ஆறு, திருமூர்த்தி ஆறு ஆகியவற்றில் தூர்வாரி அதில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கிட உத்தரவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் முதன்முதலாக கோவை ஆழியாற்றில் இன்று தூர்வாறும் பணி மற்றும் வண்டலமண் விவசாயிகளுக்கு வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் மழைக் காலத்தில் இந்த அணையில் கூடுதலாக அரை டி.எம்.சி. தண்ணீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. 

இதுமட்டுமின்றி இங்கிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் உரத்தண்மை வாய்ந்ததாகும், இதை விவசாயிகளின் விளை நிலங்களில் பயன்படுத்தும்போது அதிக மகசூல் பெற பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் மற்ற ஆறு குளம், ஏரிகளிலும் இப்பணி நடைபெற்று வருகிறது.

பொதுவாக 142 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளதால் அதை சரிசெய்ய அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து குடிமராமத்து பணியினை துவங்கப்பட்டுள்ளது. 

மேலும், நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி நிதியொதுக்கீடு செய்து அனைத்துப் பகுதிகளிலும் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், தமிழக அரசு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆறு, ஏரி, குளங்களை சீர் செய்து வருகின்றன.

இதன் மூலம் எதிர்களாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது மட்டுமின்ற விவசாயிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் தேக்கி விவசாயப் பணிகள் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும், அந்த வகையில் தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர் விளம்பரத்தை தேடிக்கொள்ளும் வகையில் சீர் செய்யப்பட்ட கோவில் குளத்தில் கட்சிப் பிரமுகர்களுடன் விளம்பரம் தேடிக்கொள்ள தூர்வாரும் பணியை மேற்கொள்ளுவதுபோல் விளம்பரப்படுத்தி வருகின்றார். அவர் உண்மையிலேயே குளங்களை தூர்வார நினைத்தால் கோவை மாவட்டத்தில் ஏராளமான குளங்கள், ஏரிகள் உள்ளன. இங்குவந்து தூர்வாரினால் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழக அரசைப் பொருத்தவரை யாரும் விளம்பரத்தை தேடி வேலை செய்யவில்லை. ஒவ்வொறு பணியும், பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே அரசு செயல்பட்டு வருகின்றது. இது மக்களுக்கும் நன்றாக தெரியும், தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

இந்நிக்கழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் துரைரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், கோவை மண்டல ஆழியாறு தலைமை பொறியாளர் வெங்கடாச்சலம், கண்காணிப்பு பொறியாளர் காமராஜ், பரம்பிக்குளம் கோட்டம் செயற்பொறியாளர் கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல், நரேந்திரன், இராதாகண்ணன், முருகேசன், பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வி மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் உள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...