சமூக விரோதிகளுக்கு துணைபோகும் காவல்துறை- வாலிபர் சங்கம் கண்டனம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக கள்ளத்தனமாக மதுவை பதுக்கி விற்பனை செய்யும் சமூக விரோதிகளின் செயலை அம்பலப்படுத்திய வாலிபர் சங்கத்தினர் மீது பொய்வழக்கு போடும் காவல்துறையின் செயல்பாடு சமூக விரோதிகளுக்கு துணைபோவதாய் உள்ளது என வாலிபர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ரவீந்தரன், செயலாளர் கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குபிறகு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பள்ளி, பேருந்து நிலையம், குடியிருப்பு, மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கோவையில் பல மதுக்கடைகள்  மூடப்பட்டது. ஆனால் அகற்றப்பட்ட பல டாஸ்மாக் கடைக்களில் சட்ட விரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வாலிபர் சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தோம். ஆனால் இதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் பொதுமக்கள் காவல்துறையினர் சட்டவிரோத மதுவிற்பனைக்கு துணைபோவதாக பகிங்கரமாக குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பேருந்துநிலையம், கணபதி சங்கனூர் சாலையில் உள்ள மூடப்பட்ட மதுக்கடைகளில் பகிங்கரமாக மதுவிற்பனை செய்வதை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டோம். சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்களை கைது செய்யாத காவல்துறையினர் போராட்டம் நடத்திய எங்கள் அமைப்பினர் மீது பொய்வழக்கு போடுவதும், கைது செய்வதாக மிரட்டுவதும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிற நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்க சென்ற வாலிபர் சங்கத்தினரை சமூக விரோதிகள் போல சித்தரித்து பொய்வழக்கு போடுவதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. 

இதுபோன்ற நடவடிக்கை காவல்துறையினர் கைவிட்டு சட்டவிரோதமாக மதுவை பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யும் சமூகவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...