இந்திய விமானப் படையில் பணிபுரிய கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு

இந்திய விமானப் படையின் ஏர்மேன் பணிக்காலியிடத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் 2017 செப்டம்பர் மாதம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில், கலந்துகொள்ள விரும்பும் மனுதாரர்கள் 12 ஆம் வகுப்பு மொத்த மதிப்பெண்களில் 50 சதவிகித மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 50 சதவிகித மதிப்பெண்ணும் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், 1997 ஜூலை 7 மற்றும் 2000 டிசம்பர் 20-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடப்பட உள்ளன. பாடக்குறிப்புகளுடன் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். 

இவ்வகுப்பில் ஏர்மேன் ரெக்யுப்மென்ட் போர்டின் அலுவலர்கள் கலந்துகொண்டு இத்தேர்வின் முந்தைய வினாக்கள் மற்றும் இத்தேர்விற்கு தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்குவர்.

இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம். 

மேலும், கூடுதல் விவரங்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பயிற்சி பெற்று அரசாங்க பணியில் சேர்ந்து பயடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...