டிஎன்பிஸ்சி குரூப் 2 (ஏ) தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 2 (ஏ) தேர்வு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடைபெற உள்ளது. இப்போட்டித் தேர்வுக்கு குறைந்தபட்ச படிப்பாக ஏதாவது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. இந்த போட்டி தேர்வுக்கு வரும் மே 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த மாற்றுத் திறனாளி மனுதாரர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக சிறப்பாக தனி வகுப்புகள் ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து தேர்வு வரை சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகுப்பில் சேர டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (ஏ) தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மே 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி அரசு பணியில் சேர்ந்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...