ஜனாதிபதி தேர்தலில் பாஜக-விற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக கோவையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பேட்டி



கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி கூறிதாவது:-

மாடுகளை சந்தை படுத்துதலில் உள்ள சில விதிமுறைகளில் மட்டுமே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளை பாதுகாக்கவும், கள்ளச்சந்தையை ஒழிக்கவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து நடைபெறும் போராட்டத்தில் தாக்குதல் நடைபெறுவது தவறானது. யாரையும் தாக்க தனிப்பட்ட அதிகாரம் கிடையாது" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இறைச்சி விவகாரம் அடுத்து திராவிட நாடு என்ற முழக்கம் எழுந்துள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, "திராவிட நாடு என்று எதுவும் இல்லை. வரலாற்று புத்தகத்தில் தவறாக குறிப்பிட்டு இருக்கும் திராவிட நாடு என்பதை மாற்ற வேண்டும்" என சுப்புரமணிய சாமி வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக இரு அணிகள் இல்லை. பன்னீர் செல்வம் அணி மட்டுமே தனியாக உள்ளார். சட்டப்படியே பழனிசாமி அணி தேர்வு செய்யப்பட்டு ஆட்சி செய்து வருகிறது. 

எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு. ஜனாதிபதி தேர்தலில் பாஜக-விற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் தனி பெரும்பான்மையுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். மேலும் திமுக தவிர தேச பத்தி உள்ள கட்சிகளுடன் ஜனாதிபதி தேர்தலை சேர்ந்து சந்திப்போம்" என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...