உதகையில் கன மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி



நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரு நாட்களாக மேகம் மூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது சிறியதளவு மழையும் பொழிந்து வந்தது. 

இந்நிலையில் இன்று மதியம் திடீரென பலத்த சூராவளிக்காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.

இதனால், நீலகிரிக்கு உட்பட்ட குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகள் கடந்த சில மாதங்களாக இருந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மீண்டு குளிர்ந்து காணப்படுகிறது.

உதகையில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவது தென்கிழக்கு பருவமழை துவங்கியதற்கான அறிகுறிகள் என்றும், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று குளிர்ந்த காற்று வீசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீலகிரி பகுதி குடியிருப்புவாசி அஹமத் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...