கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் - வைகோ


கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும், கலைஞர் மிக சிறந்த இலக்கியவாதி என்றும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைக் சந்தித்த அவர், காவிரி நதி பிரச்சனையில் கர்நாடக அரசு தமிழகத்தைக் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும் இதற்கு மத்திய அரசும் துணை போகிறது என்றும் குற்றம் சாட்டினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க பார்ப்பதாகவும் கூறியதுடன் இதனை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்றும் இல்லைவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, கலைஞர் ஒரு மிகசிறந்த இலக்கியவாதி மிக சிறந்த ராஜதந்திரி எனவும் அவருடைய எழுத்துகள், பேச்சுகள் மற்றும் அவருடைய நினைவு திறன் தன்னை வியக்க வைத்துள்ளது எனவும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை எனவும் புகழாரம் சூட்டினார். வைர விழாவிற்க்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் வைர விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...