பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்- உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் பேச்சு


உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல், திறந்தவெளியில் மலம் கழித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார தூய்மை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவை மாநகரத்தில் இன்று நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 100 சதவிகிதம் குப்பை தரத்தை பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேன் சிறப்புரையாற்றினார்.

அப்போது, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அன்றாடம் வார்டுவாரியாக சென்று குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்செல்கின்றனர். மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி குப்பையினை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். தொடர்ந்து, கோவை மாநகராட்சியை சுகாதாரமிக்க, தூய்மையான மாநகரமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...