மே 17 இயக்கத்தினரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கக் கோரி அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம்


மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் முன்பாக இருந்து ஊர்வலமாக சென்று, அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசு வர்ணாசிரம கொள்கைகளை திணிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைப் சேர்ந்த ஆதிதமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 17 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...