கோவையில் கன மழை- மக்கள் மகிழ்ச்சி

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவி வந்தது. மேலும், அனைத்து குளங்களும் வறண்டு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இன்று பகல் 1 மணியளவில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.

மேலும் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசிபுரம், பேரூர், மாதம்பட்டி, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை விவசாய நிலங்களை பொழிவுபெற செய்துள்ளது.

இம்மழையினால் கோவை மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...