ஏடிஎம் மூலம் மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

ஏடிஎம் மூலம் மாத ஊதியம் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவகம் அருகே இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அறிவித்தபடி ஏடிஎம் மூலமாக மாத ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகின்ற பணத்தை பணியாளர்களது கணக்கில் வரவு வைத்து விவரம் சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி மூலம் கொண்டுவரப்படும் பொருட்களை எடைபோட்டு வாங்க எடைதராசினை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நடைமுறைபடுத்த வேண்டி ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நியாயவிலைக் கடையில் தேங்கிக்கிடக்கும் காலி சாக்குகளை விற்பனை செய்வதற்கு சீரான விற்பனை கொள்கை வேண்டும் எனவும், அனைவருக்கும் சீரான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...