கடைகளில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் கிலோ பாலித்தீன் பைகள் கோவை மாநகராட்சியில் பறிமுதல்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதியில் உள்ள மத்திய மண்டலம், வார்டு எண்- 80, ஆர்.ஜி வீதி மற்றும் தாமஸ் வீதியில் உள்ள பிளாஸ்டிக் சில்லரை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 50 மைக்ரான் அளவிற்கு குறைவாக இருந்த சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3000 ஆயிரம் கிலோ பாலித்தீன் பைகள் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடை உரிமையாளர்களிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச் சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், பாலித்தீன் பைகள் வைத்திருந்ததன் காரணமாக ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்நிகழ்வின் போது மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...