கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலைமறியல்

கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்குவதில் அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி இன்று பெற்றோர்கள், மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு உள்ளிட்டவற்றால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழக பாடத்திட்டத்தில் நீட் தேர்வு கேள்விகளானது மாறுபட்டு மருத்துவ படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கிவிட்டு மீதமுள்ளவர்களை நிர்வாகத்தினர் அலைக்கழித்துள்ளனர். 



இதனைத்தொடர்ந்து, இன்று மருத்துவக் கல்லூரியில் சிலருக்கு விண்ணப்பம் வழங்கிவிட்டு பிறரை நாளை வரும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், மாணவர்களும் அவினாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.



முன்னதாக, இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறுகையில், ஏற்கனவே மத்திய அரசின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்கள் பெரிதும் மனவுளைச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விண்ணப்பங்கள் வழங்குவதில் முறையாக செயல்படுவதில்லை. இவ்வாறாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...