சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள கோவையின் சுற்றுசுழல் ஆர்வலர்கள்.


வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையை சேர்ந்த சுற்றுசுழல் ஆர்வலர்கள் பல்வேறு மாநிலங்களில் வழியாக 60 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் சேவைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வனத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம், விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரிலேயே இந்தியா, நேபால், பூட்டான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு கோவையை சேர்ந்த நான்கு சுற்றுசுழல் ஆர்வலர்கள் 29 மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மொத்தம் 28 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு காரிலேயே சென்று பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். மொத்தம் அறுபது நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள இவர்கள் காடுகள் வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். கோவையில் உள்ள வனக்கல்லூரியில் இருந்து இன்று இவர்கள் பயணத்தை துவங்கினர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...