நீலகிரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் (பொ) வழங்கினார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.5,76,745 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் வழங்கினார். 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 77 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியனிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு பொறுப்பு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.



இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு தலா ரூ.7907 வீதம் 35 நபர்களுக்கு ரூ.2,76,745  மதிப்பிலான மின்மோட்டார் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பந்தலூர் வட்டம் மூணாடு கிராமத்தை சேர்ந்த சிபியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் (பொ) தெ.பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் எம்.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப்பாட்ஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் தனலிங்கம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...