கோவை ரயில் நிலையத்தில் முதல் முறையாக செயலி (App) மூலமாக நான்கு சக்கர வாகன சேவைகள் அறிமுகம்

கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு நேற்றைய முன்தினம் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் ஒருபகுதியாக கோவை ரயில் நிலையத்தில் முதல் முறையாக செயலி (App) மூலமாக நான்கு சக்கர வாகன சேவைகளை ரயில் பயணிகளுக்கு வழங்கும் வகையில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இச்சேவை மூலம் ஜூலை 1ம் தேதி முதல் பயணிகள் நான்கு சக்கர வாகன சேவையை கோவை ரயில் நிலையத்தில் உள்ள கியாஸ்க்குகளில் இருந்தே பதிவு செய்து கொள்ளலாம்.



பயணிகளுக்கு சேவை வழங்க தெற்கு ரயில்வே தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அதற்கு உரிய முன்னோடி திட்டமாக கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலமாக வாகன சேவைகள் அளிக்க இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னனுபவமிக்க OLA, UBER, FAST TRACK ஆகியோருடன் இணைந்து இந்த சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலி மூலமாக வாகன சேவைக்குரிய சுமார் 20 கார்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக கோவை ரயில்நிலைய சந்திப்பின் மைய நுழைவு வாயிலில் சுமார் 339 சதுர மீட்டர் பகுதியை ரயில்வேத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.



இந்த சேவையை குறித்து, UBER தெற்கு கார் நிறுவனத்தின் பொது மேலாளர் கிரிஸ்டின் ஃப்ரீஸ் கூறுகையில்; கோவையில் உபரின் இரண்டு ஆண்டுகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தெற்கு ராயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். ஏற்கனவே, உள்ள பொது மக்களுக்கான போக்குவரத்துக்கு கட்டமைப்பு வசதிகளுடன், முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பில் உள்ள இடைவெளியை நிறைவு செய்வதன் மூலம், பணிகள் அணுக்கத்தை எளிதாக்குகிறோம்.

மேலும், ராயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள தமிழகத்தில் முதல் நகரம் கோவையாகும். நகரத்திற்குள் பொது மக்கள் எளிதில் பயணிக்க உதவும் வகையில் எங்களது முனைவுகளை மேலும் வலுப்படுத்த உறுதியாக உள்ளோம். ஸ்மார்ட் ஃபோன் அல்லது இணைய வசதி இல்லாவிட்டாலும், எந்தக் கவலையும் இன்றிப் பயணிகள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல எங்கள் பிரதிநிதிகள் உதவுவார்கள்" என்றார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...